கணவனைத் தொடர்ந்து மனைவியும் உயிரிழப்பு : யாழில் சம்பவம்

தவறான முடிவெடுத்து கணவன் உயிரை மாய்த்ததை அறிந்த மனைவியும் அதேவழியில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.இந்தச் சம்பவம், யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலகப் பட்டறையில் (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது 34) மற்றும் அவரது மனைவி ரஜிதா (வயது 33) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

கணவன், நகை வேலைக்குப் பயன்படுத்தும் இரசாயனத்தை நேற்று மாலை உட்கொண்ட நிலையில், அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதும் அவரது உயிர் பிரிந்தது.

இதனையறிந்த மனைவி அதே இரசாயனத்தை உட்கொண்ட நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply