தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்

நாட்டினுள் தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று (13) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேவையான தடுப்பூசிகளை வௌிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

13 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை ரஷ்யாவிடம் இருந்து இலங்கை அரசாங்க கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply