கடனுதவியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்த பிரான்ஸ் கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தால் அண்மையில் அனுமதிக்கப்பட்ட, இலங்கைக்கான 2.6 பில்லியன் டாலர் கடனுதவி மோதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை விருத்தி செய்வதற்காக பயன்படுத்தப்பட வேண்டுமென பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. இடம்பெயர்ந்த மக்கள் தமது குடிமனைகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டுமெனவும் அவர்கர்களை மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் தடையின்றி சென்றடைவதற்கு அனுமதிக்கப்படவேண்டுமெனவும் பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் மனித உரிமை குழுக்களிலிருந்தும் கிளம்பிய எதிர்ப்புகளையும் மீறி இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான இறுதி அனுமதியை சர்வதேச நாணய நிதியம் கடந்த வெள்ளியன்று வழங்கியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply