இடம்பெயர்ந்த வன்னி மக்கள் முதலில் மீளக்குடியமர்த்தப்படுவர்:அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே
வன்னி, மன்னார் மற்றும் வவுனியர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் முதலில் குடியேறற்ப்பட்ட பின்னரே யாழ் மாவட்ட மக்கள் குடிற்றப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் தற்போது யாழ் மாநகர சபை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக சென்றுள்ள மின் சக்தி எரிபொருள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் டக்கா வீதியில் அமைந்துள்ள பொது மக்கள் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்புக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். தற்போது உடனடியாக கிளிநொச்சி முல்லைத் தீவு மாவட்டங்களை குடியேற்றக் கூடிய நிலமை காணப்படவில்லை. இவர்களும் கூட அங்குள்ள கண்ணி வெடிகள் மற்றும் வெடி பொருட்கள் அகற்றப்பட்டதும் அங்கு குடியேற்றப்படுவார்கள். இதற்க்காக தற்பபோது கண்ணிவெடி அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டள்ளதாகவும் குறிப்பட்டார். .
இவர் மேலும் குறிப்பிடுகையில் ,”யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதியும் அரசாங்கமும் மிகவும் கடுமையான முறையில் உழைத்து வருகின்றார்கள். இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் மக்களின் அத்தியவசியப் பொருட்களின் தேவையை நிறைவு செய்யம் முகமாக வெகு விரைவில் மூன்று கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் திறந்து பொருட்கள் வழங்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
தற்போதும் கூட தினமும் 40 லொறிகளில் கொழும்பில் இருந்து அத்தியவசியப் பொருட்கள் எடுத்துவரப்படுகின்றன. இந்த அளவு இன்னும் ஒரு சில நாட்களில் அதிகரிக்கப்படவுள்ளது. பெது மக்கள் தமது பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் எங்களுடன் நேரில் வந்து கலந்துரையாடலாம். கடந்த பல வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கு அரச அமைச்சர்களின் வருகை காணப்படவில்லை.தற்போத இங்கு காணப்படும் அமைதியான சூழ் நிலை காரணமாக பலரும் வந்து செல்லக் கூடிய நிலமை காணப்படுகின்றது” எனவும் தெரிவித்தார் .
முன்னாள் மேல் மாகாண சபை ஆளுனர் றெஜினால் கூறே உரையாற்றும்,” யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையேயான போக்குவரத்துக்கான பாதைப் பிரச்சினை இந்த வாரம் தீர்க்கப்படும். யாழ்ப்பாணத்தில் எந்தக் கட்சி மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் சரி ஆனால் அமைதியாகவும் சமாதானமாகவும் இந்த தேர்தல் நடைபெற வேண்டியது மிகவும் முக்கியமாகும்..
யாழ்ப்பாணத்தில் இன்று அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தற்போது முகாம் இட்டுள்ளார்கள். கடந்த காலத்தில் மக்கள் துன்பப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட இங்கு இருக்காது கொழும்பில் முகாம் இட்டுள்ளாகள். தற்போது தேர்தலுக்காக யாழ்ப்பாணம் வந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளாகள்..
ஊள்ளூராட்சி மன்றங்கள் மூலம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாது. ஆனாலும் கூட அரசாங்க கட்சியொன்று தெரிவு செய்யப்பட்டால் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வது சுலபமாக இருக்கும்” எனவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply