நாட்டின் அபிவிருத்திப் பணிகள் பின்னடைய ஒருபோதும் இடமளியேன் : ஜனாதிபதி மஹிந்த
ஒரு நாட்டையோ அல்லது கிராமத்தையோ அபிவிருத்தி செய்வதற்கு ஒரு தனி நபரால் மாத்திரம் முடியாது. அரசாங்கமும் அரசாங்கம் சார்ந்த உள்ளூராட்சி சபைகள் மற்றும் அமைச்சர்கள் திணைக்கள அதிகாரிகள் கொண்ட கூட்டுக் குடும்பத்தினது பங்களிப்பு இதற்கு இன்றியமையாததாகும்.இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிவாசிகள் உள்ளிட்ட வர்த்தகர்கள், விவசாயிகள் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம. சு. மு வுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளமையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்
தெரிவிக்கும் முகமாக கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டனர். இவர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் அங்கு உரையாற்றுகையில்,
விசேடமாக கிராமத்தினது அல்லது நகரத்தினது அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் வேளையில் ஒரு அதிகார சம்பந்தப்பட்ட இடத்திற்கு சமுகமளிக்காவிடத்து அந்தப் பணி அந்த அதிகாரி வரும் வரைக்கும் இடை நிறுத்தப்படுகின்றது. இவ்வாறான இந்த நிலைமைகளை நான் நன்கு அறிந்துள்ளேன். ஆகவே அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளுமிடத்து சம்பந்தப்பட்ட அனைவரினது ஒத்துழைப்புகள் இன்றியமையாததாக உள்ளது.
இந்த நாட்டின் அபிவிருத்தி பணிகளை பின்னடைய வைப்பதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். யுத்த சூழ் நிலையிலும் கூட காலி, ஹம்பாந்தோட்டை காங்கேசன்துறை கொழும்பு, ஒலுவில் போன்ற துறைமுகங்களுக்கான பணிகளை மேற்கொண்டு வந்தோம். அதுமட்டுமன்றி மின்சார திட்டங்களையும், நெடுஞ்சாலைகளையும் அபிவிருத்தி செய்து வந்துள்ளோம்.
நாட்டினது அபிவிருத்தியில் வியாபார நிலையில் உள்ளவர்களும் தம்மாலான உதவிகளை நல்கவேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. இந்த அடிப்படையில் வியாபாரிகளுக்கும் நாம் அபிவிருத்தி விடயங்களைப் பற்றி விழிப்பூட்டி வருகின்றோம். எதிர்காலத்தில் தமது பிரதேசங்களில் மேற்கொண்டு செல்லும் அபிவிருத்திப் பணிகளுக்கு தாங்கல் கைகொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது எங்கள் நாடு, நாம் பிறந்த மண். இந்நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்று. இந்த வகையில் நாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பணிகள் அது இன்றைக்கு மட்டும் என்று இருக்காது எதிர்கால சந்ததிகளுக்கு என்று நாம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
பயங்கரவாதிகள் கடந்த வருடத்தில் முழு இலங்கையுமே தீப்பற்றி எரியும் நிலைமைக்கு பல ஏற்பாடுகளை மேற்கொண்டபோது அது எமது பாதுகாப்பு தரப்பினராலும் பொதுமக்களினாலும் முறியடிக்கப்பட்டது. மத்திய மாகாணத்தில் புலிகள் வெடி குண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர். இறுதியாக இப்பிரதேசத்தில் உள்ள பயங்கரவாத நடவடிக்கைகளையும் நாம் முறியடித்திருந்தோம். இவ்வாறு பல தியாகங்களுக்கு மத்தியிலும் நாம் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றமையை தாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஆகவே எதிர்வரும் மாதம் 8ம் திகதி நடைபெறும் ஊவா மாகாண சபை தேர்தல் ஊவா பிரதேசத்திற்கு மட்டும் முக்கியமானதல்ல. முழு சர்வதேச நாடுகளும் எமது நிலைமையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. ஆகவே எதிர்வரும் ஊவா மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐ. ம. சு. மு. கட்சி வெற்றிபெறும் என்பதில் எமக்கு எந்தவொரு சந்தேகமுமில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply