சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டம் இந்தவாரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக நீண்டகாலமாகச் செயற்பட்டுவந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தனது இறுதி அறிக்கையை இந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளது. இந்த அறிக்கையில் வெஸ்ட்மினிஸ்டர் முறை, நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.
தேசிய காணி மற்றும் நீர் ஆணைக்குழு மத்திய அரசாங்கத்தின் பணிப்புரைக்கு அமைய எதிர்காலத்தில் காணி மற்றும் நீர் பங்கீடு தொடர்பான கொள்கைகளைத் தயாரிக்குமெனவும் அமைச்சர் கூறினார். எனினும், காணி மற்றும் கொள்கை உள்ளிட்ட தேசிய விடயங்களில் அதிகாரப் பகிர்வு இல்லையெனத் திட்டவட்டமாக மறுத்திருக்கும் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, தேசிய தேவையைக் கருதி மாகாணசபைகளுக்குத் தேவையான அதிகாரங்கள் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத்திட்டத்துக்கு அமைய புதிய அரசியலமைப்பும், அரசியலமைப்பு நீதிமன்றமுமே தேசிய பிரச்சினையைத் தீர்க்கும் முக்கிய காரணிகளாக அமையும் எனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply