ஆஸ்திரேலியாவில் பரபரப்பு காந்தி சிலை சேதம்: பிரதமர் ஸ்காட் மாரீசன் கடும் கண்டனம்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன். நகரின் புறநகர்ப்பகுதியான ரோவில்லேவில் ஆஸ்திரேலிய-இந்திய சமூக மையம் அமைந்துள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்த மையத்திற்கு இந்தியாவின் சார்பில் மகாத்மா காந்தியின் முழு உருவ சிலை பரிசாக வழங்கப்பட்டது. இந்த சிலையை ஆஸ்திரேலிய- இந்திய சமூக மையத்தில் கடந்த 12-ந் தேதி அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரீசன் திறந்துவைத்தார்.
இந்த நிலையில் காந்தி சிலை திறந்து வைக்கப்பட்ட சில மணி நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் அந்த சிலையை சேதப்படுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சிலையின் கழுத்து பகுதியை சேதப்படுத்தி தலையை துண்டிக்க முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவால் பரிசளிக்கப்பட்டு, பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பிரதமர் ஸ்காட் மாரீசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் “உலகில் மிகவும் வெற்றிகரமான பன்முக கலாச்சார மற்றும் குடியேற்ற தேசமாக இருக்கும் நாட்டில் கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான இத்தகைய தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது.
இந்த அளவு அவமரியாதையை பார்ப்பது வெட்கக்கேடானது மற்றும் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் ஆஸ்திரேலிய-இந்திய சமூகத்துக்கு பெரும் அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் வெட்கப்பட வேண்டும்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply