சீனாவில் பேருந்து : லாரி மோதல்; 8 பேர் பலி

சீனாவின் கிழக்கே அன்ஹுய் மாகாணத்தில் நேற்றிரவு 10.11 மணியளவில் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து, லாரி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply