தபால் மூல வாக்களிப்பு 90 வீதம் பூர்த்தி

யாழ்ப்பாணம் மாநகர சபை,வவுனியா நகரசபை தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு 90% நிறைவடைந்துள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர். யாழ். மாநகர சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவென 335 பேர் தகுதிபெற்றிருந்தனர். இதில் நேற்று முன்தினம் மாலை வரை 299 பேர் வாக்களித்துள்ளதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் வீ. குகநாதன்  தெரிவித்தார்.நேற்றைய தினமும் வாக்குகள் எதிர் பார்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். வவுனியா நகர சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவென 183 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

இதில் நேற்று முன்தினம் வரை 121 பேர் வாக்களித்திருப்பதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply