ரஷ்யாவின் ஏரோஃப்ளொட் விமான சேவை மீண்டும் ஆரம்பம்
ரஷ்ய ஏரோஃப்ளொட் விமான சேவை நிறுவனமானது இலங்கைக்கான விமான சேவையை 4 மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு முதலாவது வணிக விமானம் புறப்படவுள்ளது.
அந்த விமானம் இன்று திங்கட்கிழமை (ஒக் 10) முற்பகல் 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் காலங்களில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் இலங்கைக்கான விமான சேவையை ஏரோஃப்ளொட் விமான நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
இதனால் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply