மொரோக்கோவில் பிரெஞ்சு பெண் கற்களால் தாக்கப்பட்டு கொலை: கணவர் காயம்

மொரோக்கோவில், பிரெஞ்சு உல்லாசப் பிரயாணியான பெண்ணொருவர் தாக்கி கொல்லப்பட்டுள்ளதுடன், அவரின் கணவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மொரோக்கோவின் தலைநகர் ராபட்டுக்கு அருகிலுள்ள மௌலே பௌசெல்ஹாம் நகரில் திங்கட்கிழமை (12) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இருவரும் கற்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிழவித்துள்ளனர். மன உறுதியற்ற நபர் ஒருவரினால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மொரோக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டியில் மொரோக்கோ- பிரான்ஸ் அணிகள் நாளை மோதவுள்ள நிலையில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண் 82 வயதானவர் எனவும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோதே உயிரிழந்திருந்தார் என மருத்துவர் மௌலாய் யூசெப் தெரிவித்துள்ளார். 

‘அப்பெண்ணை காப்பாற்ற முடியாததால் நாம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். அவரின் கணவரும் 80 வயதைக் கடந்தவர். அவர் உறுதியான நிலையில் உள்ளார்’ எனவும் அம்மருத்துவர் தெரிவித்துள்ளார். 

இத்தாக்குதலுக்கு காரணம் தெரியவில்லை. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் 79 வயதான பிரெஞ்சு உல்லாசப் பிரயாணி ஒருவர் மொரோக்கோவின் டிஸ்னிட் நகரில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது, 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply