அர்மேனியாவில் அஸட் என்ற இடத்தில் செயற்பட்டு வரும் இராணுவ தொழில்நுட்ப தொழிற்சாலையில் தீ

அர்மேனியாவில் அஸட் என்ற இடத்தில் செயற்பட்டு வரும் இராணுவ தொழில்நுட்ப தொழிற்சாலை., நேற்று திடீரென. தீ பரவல் ஏற்பட்டது.

இந்த விபத்தில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் 15 பேர் சிக்கி உயரிழந்ததோடு மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply