தடை செய்யப்பட்ட இரசாயனப் பொருட்களை லொறியில் ஏற்றிச் சென்ற இருவர் கைது
தடை செய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்களை லொறியில் ஏற்றிச் சென்ற இருவர் திவுலபிட்டிய நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு வகையான விவசாய இரசாயனங்கள் அடங்கிய 1950 பொதிகள் காணப்பட்டதாகவும், அவற்றின் பெறுமதி 16 இலட்சத்து 72,500 ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
40 மற்றும் 45 வயதுடைய இவர்கள் வெல்லவாய மற்றும் தியத்தலாவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply