மக்களைத் தவறாக வழிநடத்த ரணிலும் மங்களவும் முயற்சி: அமைச்சர் யாப்பா
இலங்கையின் அபிவிருத்திப் பணிகள் புதிய பரிமாணத்தை அடைந்துள்ள நிலையில், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வில்லை யெனக் கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்லவென அமைச்சரவைப் பேச்சாளரான தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம், நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையம், துறைமுக அபிவிருத்தி எனப் பாரிய பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. உலக வர்த்தக மையத்திலுள்ள எனது அலுவலகத்திற்கு வந்தால், அங்கு உயரத்தில் இருந்து துறைமுகத்தின் அபிவிருத்திகளைக் கண்டுகொள்ள முடியுமெனவும் அமைச்சர் யாப்பா கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தகவல் ஊடகத்துறை அமைச்சின் ஆலோசகர்கள் சரித்த ஹேரத், சரத் கோங்காகே, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட அபிவிருத்திக்கான தேசிய ஊடக நிலையத்தின் பணிப்பாளர் ஆரிய ரூபசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கு அமைச்சர் யாப்பா தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது,
“தேசத்துரோகி, தேசப்பிரேமி” என்றெல் லாம் ரணில் கதைக்கிறார். அவரை எப்படி மதிப்பதென்று தெரியவில்லை. பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்தவர்கள் தேசப் பிரேமியா, பிரபாகரனைத் தோற் கடித்தவர் தேசத்துரோகியா என்று தெரி யவில்லை. மக்கள் சுதந்திரமாக இருந் தால்தான் எதனையும் செய்ய முடியும். ஜனாதிபதி நாட்டுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவரை என்னவென்று சொல்வது? ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பானது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினது பாதுகாப்பைவிட அதிகமானது என மங்கள சமரவீர எம்.பி கூறுகிறார். அவருக்கு எவ்வாறு ஒபாமாவின் பாதுகாப்பைப் பற்றித் தெரியும்?
ஒபாமாவின் பாதுகாப்பு தொடர்பாக எவருக்கும் தெரியாது. மங்களவுக்கும் வெட்கமில்லை, ரணிலுக்கும் வெட்கமில்லை! இவர்கள் மக்களைத் தவறாக வழிநடத்தப் பார்க்கிறார்கள். புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும். மக்கள் மத்தியில் உள்ளவர்களை இனங்காண வேண்டும். சரியான முறையிலேயே மீள் குடியேற்றம் மேற் கொள்ளப்படுகிறது. உயிரிழந்த புலி உறுப்பினர்களின் எண் ணிக்கையை இவர்கள் கேட்கிறார்கள். இர ண்டாம் உலக மகா யுத்தத்தின் போது இறந்தோர் எண்ணிக்கையை எவரும் கேட்கவில்லை.
சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகத்துக்கான போரில் ஒருகோடி ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதனைப்பற்றி எவரும் கேள்வி கேட்க வில்லை. நாமும் சர்வாதிகாரத்திற்கு எதி ராகவே போரிட்டோம்” இவ்வாறு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply