புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் மீது கல் வீச்சு தாக்குதல்

புதுடில்லியில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ் தானிகரகத்தின் மீது இன்று பிற்பகல் 3 மணியளவில் குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் இந்த கற்களால் வீசி தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியமை காரணமாக, உயர்ஸ்தானிகரகத்தின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் காயமடைந்தோர் தொடர்பாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. அதேவேளை தாக்குதலுக்கான காரணமும் தெரியவில்லை.மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply