ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இலங்கை விஜயம்; இதயங்களையும், மனங்களையும் இணைப்போம்’ நிகழ்ச்சில் பங்கேற்பு
வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இலங்கை விஜயம் செய்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் இங்கு நடத்திய ருத்ரபூஜையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஐந்தாவது முறையாக இம்முறை இலங்கை வந்துள்ள ரவிசங்கர் கொழும்பில் நடைபெற்ற ‘ இதயங்களையும், மனங்களையும் இணைப்போம்’ என்ற பெயரிலான நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் பிக்குகள், முஸ்லிம் அறிஞர்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், இந்துத் துறவிகள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் நிறைவாக ருத்ரபூஜையை நடத்தினார் ரவிசங்கர். இந்த பூஜை குறித்து அவர் விளக்குகையில்,” இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், இறைத்துவம் நிரம்பியுள்ளது.இந்த ருத்ர பூஜையின் மூலம், இயற்கையின் அனைத்து அம்சங்களும் மதிக்கப்படுகின்றன, கெளரவிக்கப்படுகின்றன” என்றார் அவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply