2009 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு வழங்கப்படுகிறது

2009 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு வழங்கப்படுகிறது.அமைதி நோபல் பரிசுக் காக மொத்தம் 205 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து பராக் ஒபாமாவை நோபல் விருதுக் கமிட்டி தேர்வு செய்து அறிவித்துள்ளது.

இது குறித்து நோபல் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில், மக்களி டையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும் சர்வதேச ரீதியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவா க்க பாடு பட்டமைக்காகவும் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங் கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நோபல் பரிசு பெறும் ஒபாமா வுக்கு 1.4 மில்லியன் டொலர் பரிசும், தங்கப் பதக்கமும், சான்றி தழும் வழங்கப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply