காணாமல் போன T-56 ரக துப்பாக்கி கண்டு பிடிப்பு

கரந்தெனிய இராணுவ முகாமில் காணாமல் போன T-56 ரக துப்பாக்கி, பட்டபொல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கரந்தெனிய இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கரந்தெனிய இராணுவ முகாமில் இருந்து டி-56 துப்பாக்கி மற்றும் மெகசீன்கள் பல காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

மேலும், இராணுவ பொலிசாரும் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரந்தெனிய இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து காணாமல் போன துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தென் மாகாணத்தில் சில கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply