இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று (11) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நுசா தெங்கரா மாகாண தலைநகரான குபாங்வுக்கு வட-வடகிழக்கே 21 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாகவும் 36 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சேத விவரங்கள் குறித்து உடனடியான தகவல் வெளியாகவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply