முப்படைகளிலிருந்து 10 மாதங்களில் 15 ஆயிரம் படையினர் வெளியேற்றம்

இலங்கை முப்படைகளிலிருந்தும் கடந்த பத்து மாதங்களில் 15 ஆயிரம் படையினர் வெளியேறியுள்ளமை நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து மாதங்களில் முப்படைகளின் 140 அதிகாரிகள் உட்பட 15,360 பேர் பாதுகாப்பு பிரிவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதில் இராணுவத்தின் 99 அதிகாரிகளும், கடற்படையின் 26 அதிகாரிகளும் மற்றும் விமானப்படையின் 15 அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

இவ்வாறு முப்படைகளிலிருந்து வெளியேறி தலைமறைவானவர்களை கைது செய்வதற்கு பொது மன்னிப்பு காலம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது வரையில் தலைமறைவானவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஒப்பந்தக் கொலையாளிகளாக பாதாள உலக தலைவர்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை பயன்படுத்துவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply