பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
பிரித்தானிய நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் குறித்த சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டுச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பெற்ற பயணத்தடை உத்தரவிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply