இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (02.12.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானதுமேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply