கால்பந்து மைதானத்தில் வெடித்த வன்முறை: 100 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு
கினியா நாட்டின் என்சரிகோர் நகரிலுள்ள உள்ளூர் மைதானத்தில் கால்பந்து போட்டியொன்று நடைபெற்றுள்ளது. இப் போட்டியில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர். போட்டியின் முடிவில் நடுவரால் சர்ச்சையான தீர்ப்பு வழங்கப்பட்டது எனக் கூறி ரசிகர்களில் ஒரு தரப்பினர் கோபமடைந்து மைதானத்தை ஆக்கிரமித்தனர்.
இதனைக் கண்ட இன்னொரு தரப்பினரும் மைதானத்துக்குள் நுழைந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இம் மோதல் ஒரு கட்டத்தில் பெரும் வன்முறையாக மாறி மைதானத்துக்கு வெளியிலும் வீதிகளிலும் ரசிகர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதோடு, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கும் தீ வைத்தனர்.
இவ் வன்முறையால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மருத்துவர் ஒருவர் கூறுகையில், “மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் உயிரற்ற உடல்கள் நிரம்பியுள்ளன. அமரர் அறையும் நிரம்பியுள்ளது. சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply