விசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 08 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவ எலிய பகுதியில் வைத்து நேற்று (02) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 மற்றும் 65 வயதுடைய இந்தோனேசிய பிரஜைகள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply