அம்பாந்தோட்டையில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

அம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ, மெதஆர பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது. அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய விவசாயி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்றைய தினம் வயலில் உழுதுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply