உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் குருவிட்ட பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார். குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஹிந்த பகுதியில், குருவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கு அமைய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவராவார். மேலும், சம்பவம் தொடர்பில் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply