வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் முதியவர் உயிரிழப்பு

கம்பஹா, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவெல்லேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் முகத்தில் பலத்த காயங்கள் காணப்படுவதாகவும் வீட்டில் உள்ள பல்வேறு பொருட்கள் உடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply