சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஒருவர் கைது : நால்வர் தப்பியோட்டம்
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய நெகுடுனுவெவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர். கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபரை கைது செய்யும் போது அவ்விடத்திலிருந்த மேலும் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பி சென்ற சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply