அத்தியாவசிய பொருட்களின் விலை விரைவில் குறைப்பு

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை இவ் வாரம் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இறக்குமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்களுடன் கடந்த 24 ஆம் திகதி கலந்துரையாடியதுடன் அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சந்தையில் தற்போது டின் மீன் 425 ரூபா முதல் 490 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. எனினும் அதனை உள்ளூர் உற்பத்தியாளர்கள் 300 ரூபா என தெரிவிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இவ் வாரம் டின் மீன்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படுமென அமைச்சர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply