வாரியபொல பகுதியில் நீரில் மூழ்கிய இரு சிறுவர்கள் – ஒருவர் உயிரிழப்பு
வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிந்தகொல்ல வாவியில் நேற்று சனிக்கிழமை (25) நீராடிக்கொண்டிருந்த இரு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
13 வயதுடைய, பண்டார கொஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
ஹிந்தகொல்ல கிராமத்தில் உள்ள வாவியின் பாதுகாப்பற்ற பகுதியில் நீரில் மூழ்கிய இந்த இரண்டு சிறுவர்களும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் சடலம் வாரியபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாரியபொல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply