காலி இமதுவ பகுதியில் மூன்று பஸ்கள் மோதி விபத்து : 29 பேர் காயம் 

காலி, இமதுவ, அங்குலுகஹா சந்திப் பகுதியில் மூன்று பஸ்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 29 காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (26) காலை பயணிகள் போக்குவரத்து பஸ்கள் இரண்டும் அலுவலகமொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுமே மோதியுள்ளன.

வீதியோரமாக நிறுத்தப்பட்ட ஒரு பஸ்ஸில் அவ்வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்று மோதியதை தொடர்ந்து, அதன் பின்னால் வந்த மற்றொரு பஸ்ஸும் மோதிக்கொண்டதில் இந்த மூன்று பஸ்களும் விபத்தில் சிக்கியுள்ளன.

விபத்தில் சிக்கி காயமடைந்த 29 பேரில் 23 பேர் இமதுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 6 பேர் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply