லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்கள் விடுதலை விவகாரம் : சட்டமா அதிபர்ஜனாதிபதி இன்று சந்திப்பு
சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்யவேண்டும் என சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க பரிந்துரை செய்துள்ளமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்று ஜனாதிபதி அவரை சந்திக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஏனைய குற்றச் செயல்களுக்கு நீதி கோரி சுதந்திர ஊடக இயக்கமும் ஏனைய ஊடக நிறுவனங்களும் கறுப்பு ஜனவரியை அனுஷ்டிக்கும் தருணத்தில் லசந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டும் சட்ட மாஅதிபர் பரிந்த ரணசிங்க கையொப்பமிட்ட கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply