புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி மரணம்

புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார். தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திறகு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

வீட்டார் குறித்த சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதும் சிறுமி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் புளியங்குளம், பழையவாடி பகுதியைச் சேர்ந்த 06 வயதுடைய ந.மதுசாளின என்ற சிறுமியே மரணமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply