தமிழர் பகுதியில் கோர விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி மற்றொருவர் காயம்

வவுனியா பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று (17.2.2025) மாலை வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த நிமல் வயது 35 என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக தெரியவருகையில், நேற்று மாலை குறித்த நபரும் மற்றொருவரும் பறயநாலங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அதில் பயணித்த மற்றயநபர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், விபத்துச் சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply