வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த பேருந்து

மலுல்ல பகுதியில் உள்ள ஹகுரன்கெத – அதிகரிகம சாலையில் லிசகோஸ் அருகே வழித்தடம் மாறிய பேருந்து வீட்டின் கூரையின் ஒரு பகுதியை மோதி உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்தின் போது பேருந்தில் 20 பயணிகள் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply