தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதியதால் உயிரிழப்பு

அரியாலை புங்கங்குளம் புகையிரத தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ஒருவர் புகையிரதம் மோதியலில் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கேணியடி அரியாலையைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது-20) என்ற இளைஞராக ஆவார்.

யாழ்ப்பாண நொதோன் வைத்தியசாலையில் கடமைபுரியும் அவர் செவ்வாய்க்கிழமை (17) மாலை 6.00 மணியளவில் புங்கங்குளம் பகுதியில் உள்ள புகையிரத தண்டவாளத்தில் இருந்துள்ளார்.

அச் சமயம் அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அங்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply