கோர விபத்து சம்பவ இடத்திலேயே பலியான வைத்தியர்
திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து திருகோணமலை – சேருநுவர காவல் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் நேற்று (17) செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மற்றுமொருவர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவர காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்ற பவுசர் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த 59 வயதுடைய வைத்தியர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு முச்சக்கர வண்டி செலுத்திச் சென்ற நபர் படுகாயம் அடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த வைத்தியரின் சடலம் சேருநுவர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply