வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழப்பு

யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் வீட்டு கூரையின் மேல் உள்ள சீற்றினை சீர் செய்வதற்காக கூரையின் மேல் ஏறியுள்ளார்.

இதன்போது வீட்டு கூரை உடைந்து கீழே விழுந்த நிலையில் மயக்கமுற்றுள்ளார்.

பின்னர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply