ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டமூலம் : உயர் நீதிமன்றின் தீர்மானம்

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது.

இன்றைய சபை அமர்வின் ஆரம்பித்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவித்தார்.

இதன்படி குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply