கரந்தெனிய இரட்டைக் கொலை சந்தேக நபர் அடையாளம்
கரந்தெனியவில் 74 வயது மூதாட்டி மற்றும் அவரது 25 வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரந்தெனிய, கொட்டவெலவில் வசித்து வந்த பாதிக்கப்பட்ட நபர்கள் நேற்று மாலை (11) கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கபுலகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சடலங்கள் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 43 வயது சந்தேக நபர், பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இருப்பினும், கொலைகளுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரைக் கைது செய்ய கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply