அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அநீதி: சஜித் குற்றச்சாட்டு
கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16,600 ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக முன்நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பியபோது, அரசாங்கம் இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக கருதவில்லை எனக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டு கடந்த அரசாங்கம் 53,000 பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தியபோது, 22,000 பேர் இலவசக் கல்வியை வலுப்படுத்த ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்பட்டனர்.
கோவிட்-19 தொற்றுநோயின் சவால்களுக்கு மத்தியில் இவர்கள் சிறப்பாக பணியாற்றிய போதிலும், அரசாங்கம் அவர்களை இப்போது கைவிட்டுள்ளதாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் இருந்தபோதிலும், நேரடியாக இணைத்துக்கொள்ளாமல் சாதாரண முறைமையில் ஆசிரியர் சேவையில் இணையுமாறு அறிவுறுத்துவதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
இந்த அனுபவமிக்கவர்கள் நடைமுறைப் பரீட்சை எழுதி, தரம் 2.2 இல் சேர்க்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்குள் முதுகலை டிப்ளோமா பெறுவதற்கு சமரசம் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2005ஆம் ஆண்டு இதே முறையில் ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டதால் இப்போதும் இது சாத்தியமெனவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் இலாபம் பெற்ற பின்னர் இவர்களை அரசாங்கம் ஒரம்கட்டிவிட்டதாகவும், இவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் கூறிய சஜித், ஐக்கிய மக்கள் சக்தி இவர்களுக்காக இன்றும் எதிர்காலத்திலும் போராடும் என உறுதியளித்தார்.
பிரதமரின் அமைச்சரவைக் குறிப்பின்படி, இளங்கலைப் பட்டம் அடிப்படைத் தகுதியாக உள்ள பதவிகளில் 50,000 வெற்றிடங்கள் உள்ளதால், இவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, கடமை, நீதி மற்றும் நியாயத்தை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply