ஜெனிவாவில் புலிக்கொடி பறக்க இடமளிக்கக்கூடாது : கே.பி. தசநாயக்க
ஜெனிவாவில் புலிக்கொடியைக் காட்சிப்படுத்துவதற்கும், புலி ஆதரவாளர்கள் பரப்புரைகளில் ஈடுபடுவதற்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என்று ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான டி.கே.பி. தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்றது. தமிழ்ப் புலம்பெயரிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் அங்கு பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். 32 நாடுகளில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. இலங்கையிலும் அந்த அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது.
எனவே, தடைசெய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் பரப்புரையில் ஈடுபடவும், கொடிகளைக் காட்சிப்படுத்தவும் இடமளிக்கக்கூடாது – என்றார்.
You can leave a response, or trackback from your own site.


Leave a Reply