யாழ் நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காணி ஒன்றை பண்படுத்தலில் போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த தகவல் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை அடுத்து மானிப்பாய் பொலிஸார் விசேட அதிரடி படையினர் குறித்த காணியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய தினம் (03) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த வெடிபொருட்கள் விசேட அதிரடி படையினரால் அகற்றப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாடங்கள் தெரிவிக்கின்றன

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply