இன்று உலக ஆசிரியர் தினம்

மாணவர்களுக்கு அறிவு ஒளியை ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். இவர்களின் சேவையை பாராட்டுதல், அவர்களின் பொறுப்புகளை உணரச்செய்யும் விதமாக ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் ஒக்டோபர், 5ல் உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

மாணவர்களை எதிர்கால சமுதாயத்தில் சிறந்தவர்களாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவர்களும் தங்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும்.

இதேவேளை இலங்கையில் ஒக்டோபர் 06 ஆம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால், கௌரவ சபாநாயகரின் நீண்டகாலப் போராட்டத்தின் விளைவாக, இலங்கை ஆசிரியர் சேவை அரசியலமைப்பு 1994 அக்டோபர் 6 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply