பிரான்சின் பிரதமாராக மீண்டும் செபாஸ்டியன் லெகோர்னு நியமனம்
பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன், பதவியில் இருந்து விலகிய செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளார்.
பதவியேற்ற சில வாரங்களில், தமது பதவியை கடந்த திங்கட்கிழமை இராஜனாமா செய்த, 39 வயதான செபாஸ்டியன் லெகோர்னு, தற்போது புதிய அமைச்சரவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என பிரான்ஸ் ஜனாதிபதியின் அலுவலகம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.
நாட்டின் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதியும் அரசியல் கட்சிகளும் பல நாட்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பின்னர், செபாஸ்டியன் லெகோர்னு மீண்டும் திரும்புவது ஆச்சரியமான நடவடிக்கையாகும் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply