ஒன்லைன் வர்த்தகம் மூலம் ஒரு கேடி ரூபா நஷ்டம் இளம் குடும்பஸ்தர் உயிர் மாய்ப்பு

ஒன்லைன் வர்த்தகத்தில் ஒரு கோடிரூபா பணத்தை இழந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – கட்டுவன் பகுதியை சேர்ந்த 30 வயதான தங்கராசா ராஜ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் அமெரிக்க கம்பனி ஒன்றில் ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். குறித்த வர்த்தகமானது நேற்றிரவு சரிவடைந்துள்ளதால் அவருக்கு ரூ . 1 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் மனவிரக்தியடைந்த நிலையில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இதற்கு முன்னரும் இவர் ஒருதடவை பல இலட்சம் ரூபா நஷ்டத்தை சந்தித்த நிலையில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த நஷ்டத்தில் இருந்து அவரை மீட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply