நல்லிணக்கம் இனங்களுக்கிடையில் நாட்டின் அரசியலைப் பலப்படுத்தும் : சுவிஸ் தூதரகச் செயலர் தெரிவிப்பு

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுமாக இருந்தால், நாட்டில் அமைதி மற்றும் வன்முறையற்ற சூழல் உருவாகுவதுடன், அரசியல் ஸ்திரத் தன்மையையும் பலப்படுத்தும் என்று இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான முதன்மைச் செயலர் ஜஸ்டின் பொய்லட் தெரிவித்தார்.

சட்டத் துக்கும் மனித உரிமைக்குமான கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரசியல் தீர்வும் பொறப்புக்கூறலும் எனும்
கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் அவசியம். தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு நல்லிணக்கத்துக்கு வலுச்சேர்க்கும். இனங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் இனியும் ஏற்படாமல்இருக்க நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசியலமைப்பில் சீர்திருத்தம் அவசியம் -என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply