பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் டான் மெக்ராத் காலமானார்

90களில் அமெரிக்காவில் மிகவும் பரவலான கார்ட்டூன் தொடர் ‘தி சிம்ப்சன்ஸ்’. இது பின்னாட்களில் உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

‘தி சிம்ப்சன்ஸ்’ ஐ உருவாக்கியவர் பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் டான் மெக்ராத் ஆவார். 1997ஆம் ஆண்டு ‘தி சிம்ப்சன்ஸ்’ தொடரின் ‘ஹோமர்’ஸ் போபியா’ எபிசோடுக்காக இவருக்கு எம்மி விருது கிடைத்தது.

61 வயதான டான் மெக்ராத் சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14-ஆம் திகதி காலமானதாக அவரது சகோதரி கெயில் மெக்ராத் தெரிவித்துள்ளார். இது அவரது கார்ட்டூன் ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply