ஜீவனின் திருமண நிகழ்வில் பங்கேற்க இந்தியா பயணமானார் ரணில்
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டுள்ளார்.
குறித்த இருவரும் இன்று (21) காலை 8.40 மணிக்கு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-121 மூலம் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
எனவே, ஜீவன் தொண்டமானின் திருமணத்திற்காக இந்தியா செல்வதால் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு நுகேகொடையில் நடைபெறும் பேரணியில் ரணில் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply