கிளிநொச்சி மக்களுக்கு எச்சரிக்கை இரணைமடுக்குளத்தில் நீர்மட்டம் வெகுவாக உயர்வு

பலத்த மழை காரணமாக, கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், குளத்தின் 14 வான்கதவுகள் திறக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு மக்கள், குறிப்பாக ஐயன் கோவிலடி, முரசுமோட்டை, கண்டாவளை, உரியன், பனங்கண்டி தடுவன்கொட்டி மற்றும் கனகராயன் குளம் அருகே உள்ள மக்கள், நிலைமையை கவனத்தில் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply